கொழும்பு பல்கலைக்கழக கணினி அருங்காட்சியகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞான பீடங்கள் மற்றும் பல்கலைக்கழக நூலகத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொழும்பு பல்கலைக்கழக கணினி கல்லூரி (யு.சி.எஸ்.சி) ‘கொழும்பு பல்கலைக்கழக கணினி அருங்காட்சியகத்தை அதன் வளாகத்தில் வெளியிடு வதுடன். இலங்கையின் முதலாவது , ஆன்லைன் மின் அருங்காட்சியகத்தை emuseum.cmb.ac.lk இல் வெளியிடுகிறது . இதை கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர், மூத்த பேராசிரியர் சந்திரிகா விஜ்ஜெயரத்னே 2021 ஜனவரி 21 அன்று யு.சி.எஸ்.சி.யில் திறந்து வைப்பார்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் இவ்வேளை,கொழும்பு பல்கலைக்கழக கணினி கல்லூரி தனது 50+ ஆண்டுகள் நிறைவை ஒட்டி பயணிக்கிறது.இது 1967ம் ஆண்டு கணினி கற்கை நெறியை அதனுடைய விஞ்ஞான பாடத்திட்டத்தின் ஓர் அலகாக போத்தித்து வந்த உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்

இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும், குறிப்பாக இளைய தலைமுறையினர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான பயணத்தை கணினிகளின் பரிணாம வளர்ச்சியுடன் மேற்கொள்ள இது உதவுகிறது.